தமிழக செய்திகள்

கடலோர எல்லைகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் -சீமான் வலியுறுத்தல்

இலங்கையில் சீன ராணுவம் குவிப்பு: கடலோர எல்லைகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

தினத்தந்தி

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் இந்திய ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவைவிட சீனாவையே முதன்மையான நட்பு நாடாகக் கருதி முக்கியத்துவம் அளித்துவருகிறது. தற்போது இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்