கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு!

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு 100-க்கும் அதிகமாக உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக மத்திய அரசு ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவுடன் 20-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு