சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீரப்பின் படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்ஜெட் தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தினர்.