தமிழக செய்திகள்

கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய மந்திரி எல்.முருகன்

கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார்.

தினத்தந்தி

அப்போது அவர் கூறியதாவது:-

2014-2015-ம் நிதி ஆண்டு முதல் 2018-19-ம் நிதி ஆண்டு வரை சராசரியாக 10.2 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத்துறை வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 1 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி சுமார் 8 சதவீதமாக உள்ளது. மீன் வளர்ப்பில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா, பல துறைகளை போன்று கடல் உணவு துறையையும் பாதித்துள்ளது. இருந்தபோதிலும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மீண்டு வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும். கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்த தேவையான கொள்கை ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்