தமிழக செய்திகள்

டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

தேசிய டாக்டர் தினத்தையொட்டி தேனி கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்

தினத்தந்தி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவையாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் போது தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளா தேவி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் பொன்னாங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்