தமிழக செய்திகள்

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்குகிறது

சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு எழுதிய (தொகுதி-4 பணிகள்) தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில், அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 8 மற்றும் 18-ந் தேதி வரையில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டும் அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி