சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒவ்வொரு தளத்திலும் உள்ள புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, அவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லியோனி, குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியத்தை எளிமைப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பாடம் நடத்த அதிக படங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கல்வி தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை அவர் பாடம் நடத்த இருப்பதாகவும் லியோனி தெரிவித்துள்ளார்.