தமிழக செய்திகள்

தென் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவலாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்