தமிழக செய்திகள்

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து பெய்து வந்தது. அதன் பின்னர் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை குறையத்தொடங்கி, பெரும்பாலான இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வறண்ட வானிலையே நிலவுகிறது.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 1-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (புதன்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை), வருகிற 1-ந் தேதியும் (சனிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது