கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

சென்னை,

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் காலை 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்