தமிழக செய்திகள்

சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்கக்கடலில் கடந்த 4 மற்றும் 9-ந் தேதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தேவாலா 7 செ.மீ., கூடலூர் பஜார், பந்தலூர், செருமுள்ளி, ஹாரிசன் எஸ்டேட், நடுவட்டம், மேலாளத்தூரில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை