தமிழக செய்திகள்

வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதிலும் இந்த மாத ஆரம்பத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் உள்பட சில இடங்களில் கனமழையும் பெய்தது. கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் அந்த அளவுக்கு மழை இல்லை. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது.

இந்தநிலையில் தென் மேற்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் மட்டும் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து