தமிழக செய்திகள்

நிலவின் தென் துருவத்தை ஆராய 22-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவப் பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.

தினத்தந்தி

சென்னை,

இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கவுண்ட்டவுனும் நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து வரும் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்துடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டதால் நாங்கள் சோர்ந்து விடவில்லை. மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக, ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் கசிவு சரி செய்யப்பட்டு உள்ளது. வரும் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு அந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்துவோம். இதற்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 20 மணிநேரம் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?