தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

* மூர் மார்க்கெட் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* மூர் மார்க்கெட் - ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

*பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*அரக்கோணம் - வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி சென்னை கடற்கரை மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 9-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு