சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நிலச்சரிவு காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16127), இன்று (செவ்வாய்க்கிழமை) எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கொல்லம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16724), இன்று கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில், கொல்லம் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.