தமிழக செய்திகள்

மூர்மார்க்கெட்-திருப்பதி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மூர்மார்க்கெட், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் திருச்சானூர் வரையும், திருப்பதியில் இருந்து புறப்படும் ரெயில்கள் திருச்சானூரில் இருந்து புறப்பட்டு மூர்மார்க்கெட், அரக்கோணம் வரையிலும் இயக்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

* அரக்கோணத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66043), அதற்கு மாற்றாக திருச்சானூர் வரை இயக்கப்படும்.

* திருப்பதியில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் பயணிகள் ரெயில் (66044), அதற்கு மாற்றாக திருச்சானூரில் இருந்த மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும்.

* திருப்பதியில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் (சென்னை சென்டிரல்) வரும் பயணிகள் ரெயில் (66070), அதற்கு மாற்றாக திருச்சானூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும்.

* மூர்மார்க்கெட்டில் இருந்த வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் (66069), அதற்கு மாற்றாக திருச்சானூர் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து