கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ஜசிதி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12375) விஜயநகரம், குர்தா சாலை, நாரா மர்தாபூர், ஆங்குல், சாம்பல்பூர், ஜார்சுகுடா வழியாக இயக்கப்படும்.

அதேபோல, ஜசிதியில் இருந்து அடுத்த மாதம் 13-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12376) ஜார்சுகுடா, சாம்பல்பூர், ஆங்குல், நாரா மர்தாபூர், குர்தா சாலை, விஜயநகரம் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்