சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
நாகர்கோவிலில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் பி.ஜி.க்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16336) வருகிற 10-ந் தேதி காந்திதாம் பி.ஜி.க்கும் பதிலாக அகமதாபாத் செல்லும்.
மேலும், இந்த ரெயில் அகமதாபாத்-காந்திதாம் பி.ஜி. இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, காந்திதாம் பி.ஜி.யில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16335) வருகிற 13-ந் தேதி காந்திதாம் பி.ஜி.க்கு பதிலாக அகமதாபாத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.