தமிழக செய்திகள்

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மீட்பு

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 26). இவர் இணையத்தில் வேலை தேடியதில் 'வொர்க் பிரம் ஹோம்' என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியுள்ளார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும், இதனால் இவர் முன்பணமாக சிறிது சிறிதாக ரூ.2 லட்சத்து 415-ஐ கூகுள்பே மூலம் சம்பந்தப்பட்ட லிங்கில் இருந்து அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் அவர் கட்டிய முன்பணம் திருப்பித்தராததால், இதுபற்றி அஞ்சு, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அதிலிருந்து புகார்தாரர் அனுப்பிய ரூ.2 லட்சத்தை மீட்டு மீண்டும் அஞ்சுவின் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை அஞ்சுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வழங்கினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு