சென்னை,
சென்னை பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் உள்ளிட்ட 1,241 போக்குவரத்து பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கான காசோலையை தமிழக போக்குவத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிதி நிலையை பொறுத்து படிப்படியாக அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.