தமிழக செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

தினத்தந்தி

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வெளியேறியது. பின்னர் அது திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள ரோட்டை கடந்து சென்றது. அதன்பின்னர் சிறிது தூரம் ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடியது. அதைத்தொடர்ந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வனவிலங்குகள் ஏராளமாக நடமாடி வருகின்றன. எனவே திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்' என்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை