image courtesy: CMOTamilNadu twitter  
தமிழக செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வைத்து பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் பொதுப்பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்