தமிழக செய்திகள்

வேதியியல் துறை பேரவை கூட்டம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வேதியியல் பேரவை மன்ற செயலாளர் அம்பிகாவதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் என்ஜினீயரிங் கல்லூரி இணை பேராசிரியர் ஜேம்ஸ் பால்கன் ஆனந்த் கலந்து கொண்டு "எரி பொருளாக ஹைட்ரஜன் மற்றும் அதன் நவீன பயன்பாடுகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஹைட்ரஜன் தயாரிக்கும் முறை, ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள், அதன் நவீன பயன்பாடுகள் குறித்தும், மாணவிகளுக்கு எதிர்வரும் காலங்களில் கல்வித்துறை மட்டுமல்லாது தொழில்துறையிலும் சிறந்து விளங்குவதற்குரிய வழிமுறைகள் குறித்தும் பேசினார். 3-ம் ஆண்டு மாணவிகள் அஜிநேஷா, ஷிபா மரியம் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் 3-ம் ஆண்டு வேதியியல் பேரவை மாணவ செயலாளர் மாலதி ஐஸ்வர்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் கலைச்செல்வி, வேதியியல் பேரவை மன்ற செயலாளர் அம்பிகாவதி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.