தமிழக செய்திகள்

செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த பரனூரில் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

ராஜபாளையத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் நேற்று இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அவருடன் காரில் 2 பேர் பயணித்தனர். அப்போது செங்கல்பட்டை அடுத்து உள்ள பரனூர் சுங்கச்சாவடி அருகே எதிர்பாராத விதமாக கார் திடீரென தீப்பிடித்தது. உடனே காரில் இருந்த மூன்று பேரும் காரை விட்டு இறங்கினர்.

அவசர அவசரமாக காரில் இருந்து வெளியேறிய அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் கார் மளமளவென தீப்பிடித்து முழுவதுமாக ஏறிய தொடங்கியது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது .விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்