தமிழக செய்திகள்

சென்னை: எண்ணூர் கடலில் குளித்த 4 வடமாநில வாலிபர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயம்...!

எண்ணூர் கடலில் குளித்த 4 வடமாநில வாலிபர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எண்ணூர் கடலில் குளிப்பதற்காக 4 வடமாநில வாலிபர்கள் இன்று சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி தத்தளித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் கடல் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு எண்ணூர் தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். இவர்கள் கடலில் மூழ்கி மாயமான 4 வடமாநில வாலிபர்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

எண்ணூர் கடலில் குளித்த வடமாநில வாலிபர்கள் 4 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்