தமிழக செய்திகள்

சென்னை: ரெயிலில் அனாதையாக கிடந்த 9 மாத குழந்தை மீட்பு

குழந்தையை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர், அரசு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து நேற்று காலை ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயிலின் எஸ்.7 பெட்டியில் பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அருகில் பெற்றோர் மற்றும் உறவினாகள் யாரும் இல்லை. இதையடுத்து, குழந்தையை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர், அரசு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ரெயிலில் விட்டு சென்றது பெற்றோரா? அல்லது வேறு யாரேனுமா? என்றும், குழந்தையுடன் ரெயிலில் ஏறிவிட்டு, குழந்தை கையில் இல்லாமல் இறங்கும் பயணி யார்? என்றும் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு