தமிழக செய்திகள்

சென்னை: ஊழியர்கள் 50 பேருக்கு காரை பரிசளித்த தனியார் ஐடி நிறுவனம்

கார் வழங்கியதோடு, ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை ஒதுக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களில் 50 பேருக்கு 50 கார்களை பரிசளித்துள்ளது. ஊழியர்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்ந்தெடுக்கும்படி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இதையடுத்து, ஊழியர்கள் விரும்பிய கார் விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக ஊழியர்கள் 50 பேருக்கு விரும்பிய கார்களை நிறுவன தலைவர் வாங்கிக்கொடுத்தார்.

தங்களது 38 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளையும் ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதேபோல கடந்த ஆண்டும் 100 ஊழியர்களுக்கு கார்களை இந்நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு