தமிழக செய்திகள்

சென்னை: உயிரிழந்த தந்தை, மகள் சடலங்கள் மீட்பு - டாக்டர் கைது

கடந்த செப்டம்பர் மாதம் டாக்டர் எபினேசரிடம் சிகிச்சை பெற்று வந்த சாமுவேல் சங்கர் திடீரென உயிரிழந்துவிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்த தந்தை, மகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய டாக்டர் சாமுவேல் எபினேசரை போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயலை சேர்ந்த சிந்தியா (வயது 35) என்பவர் அவரது தந்தை சாமுவேல் சங்கருடன் (வயது 70) வசித்து வந்தார். சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சாமுவேலுக்கு, வீட்டிலேயே வைத்து டயாலிஸில் சிகிச்சையை டாக்டர் எபினேசர் என்பவர் கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எபினேசரிடம் சிகிச்சை பெற்று வந்த சங்கர் வீட்டிலேயே திடீரென உயிரிழந்தார், மகள் சிந்தியா, வீட்டுக்கு வந்த எபினேசரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் எபினேசர் கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு சிந்தியா உயிரிழந்துள்ளார். இருவரின் சடலங்களையும் அப்படியே அறையில் பூட்டி விட்டு, ஏ.சியை ஆன் செய்து அங்கிருந்து கிளம்பி தப்பிவிட்டார் டாக்டர் எபினேசர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக இன்று அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்ற போது சங்கர், சிந்தியாவின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. சந்தேகத்தின் பேரில் டாக்டர் சாமுவேல் எபினேசரிடம் நடத்திய விசாரணையில் குற்றம் செய்ததை ஒத்துக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்