தமிழக செய்திகள்

சென்னை புத்தக கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் 47-வது புத்தக கண்காட்சி இன்று தொடங்கி வரும் 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வந்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து