சென்னை
சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.