தமிழக செய்திகள்

அரசு பஸ் மோதி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு உத்தரவு

சென்னீர்குப்பம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பஸ் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தான்.

சென்னை,

சென்னீர்குப்பம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பஸ் மோதி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு பஸ் மோதி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஹேமசங்கர். கடந்த 25.7.2024 அன்று இவர், தனது மகன் பிரவீனுடன் (வயது 17) சென்னீர்குப்பம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பிரவீன் உயிரிழந்தார்.

குடும்பத்துக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு

இதையடுத்து ஹேமச்சங்கர் ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் அரசு பஸ்சை ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறி மனுதாரர் ஹேமசங்கருக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடாக ரூ.31.70 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT