தமிழக செய்திகள்

சென்னை: மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அதிகாரிகல் நேரடியாக மேற்கு மாம்பலத்துக்கு சென்று அங்கு உள்ள மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மளிகை கடைகளில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு செய்தனர். கடைகளில் கீழ் தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் காலாவதியான பொருட்கள் ஏதும் இருந்தால் அது பறிமுதல் செய்யப்பட்டு, அந்த பொருட்கள் பறிமுதல் செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு