தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலின் மனைவி, குடும்ப சண்டை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றார்.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக காமாட்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சாமி சந்திரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாமி சந்திரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிசந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு