தமிழக செய்திகள்

சென்னை கலாஷேத்ரா விவகாரம்: ஆசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரிபத்மன், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ச்சியாக கலாஷேத்ராவில் பயின்று வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் புகார் அளித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கூடும் என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் மற்றும் சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதால், ஹரிபத்மன் வெளியே வருவது வழக்கு விசாரணையில் தொய்வை ஏற்படுத்தும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?