தமிழக செய்திகள்

சென்னை, மதுரை ஐகோர்ட்டு 14-ந் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை, மதுரை ஐகோர்ட்டு 14-ந் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் தலைமை பதிவாளர் அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு நேரில் வந்து வழக்குகளை விசாரிக்கின்றனர். அரசு வக்கீல்கள் சிலர் வழக்குகளில் நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 14-ந் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையின் அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில், 50 சதவீத பணியாளர்களை இரு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் 2 நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணி ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத பணியாளர்கள் தேவைக்கேற்ப அழைக்கும் பட்சத்தில் பணிக்கு வரும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்