தமிழக செய்திகள்

கார் கவிழ்ந்து சென்னை மருத்துவ கல்லூரி மாணவி பலி

சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்ததில் மருத்துவ மாணவி பலியானார்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள மதுவாடா கிராமத்தை சேர்ந்த நிஷாத் அகமத் (வயது 21), ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சண்முகி (22), அந்தமான் போர்ட் பிளேரை சேர்ந்த அலினா (18), சாஜான் (18), ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த மகுண்டாலே அவுட்டை சேர்ந்த ரித்தின் (20), கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுப்ரீத் (19) ஆகியோர் படித்து வருகிறார்கள்.

இவர்கள் 6 பேரும் நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

மாணவி பலி

காரை நிஷாத் அகமத் ஓட்டினார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆம்பூரை அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவி சண்முகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் காயங்களுடன் உயிர்தப்பினர்.

அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்