தமிழக செய்திகள்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.1,000 பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.1,000 பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MRVijayabaskar #TransportDepartment

தினத்தந்தி

சென்னை

தமிழக அரசு கடந்த 20ம் தேதி மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே போல ஒரு நாள் பயண அட்டை கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆகவும் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பஸ் பாஸ் விலை உயர்த்தபடவுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது தினசரி பஸ் பாஸ் பயன்படுத்துபவர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதால் அதில் சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது என கூறினார்.

புகைப்படத்துடன் கூடிய தினசரி பஸ் பாஸ் வழங்க போக்குவரத்துறை முடிவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும்.

அதே நேரம் சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணத்தினை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது

ரூ.240 ஆக உள்ள மாதாந்திர பஸ் பாஸ் பயணக் கட்டணம் மட்டும் தற்பொழுது ரூ.320 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.50-க்கு வழங்கப்பட்டு வரும் தினசரி பஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப் போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது புதிதாக 2000 பேருந்துகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களில் ஈடுபட்ட 1.57 லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மானிய ஸ்கூட்டருக்காக 5 நாட்களில் 1,16,500 பேர் எல்எல்ஆருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்