தமிழக செய்திகள்

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக நிறுத்தம்

சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

கோயம்பேடு-பரங்கிமலை இடையே மெட்ரோ வழித்தடங்களில் திடீரென ஏற்பட்ட மின்சார கேபிள் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இருந்து மாற்று வழித்தடமான வண்ணாரப்பேட்டை வழியை பயன்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் வலியுறுத்திய நிலையில் தற்போது பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னை சென்ட்ரலிலிருந்து விமானநிலையம் செல்லும் அனைத்து மெட்ரோ ரெயில்களும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானநிலையம் முதல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையிலான கோயம்பேடு வழித்தடமும் பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையிலான வழித்தடமும் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்