சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ரமேஷ் (வயது 48) என்பவர் பயணம் செய்தார்.
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நுழைந்தபோது, ரமேஷ் ஓடும் ரெயிலில் இருந்து தவறி நடைமேடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.