தமிழக செய்திகள்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சந்தித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.

அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அவரது மாளிகையில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சந்தித்தார். நேற்று நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவர் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடாபாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையா எம்.ஆா.சிபி சக்கரவாத்தி, துணை ஆணையா ஆா.பொன் காத்திக்குமா ஆகியோ தமிழக ஆளுநா ஆா.என்.ரவியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்