கோப்பு படம் 
தமிழக செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மதியம் 1 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபர் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, இன்று பிற்பகல் 1 மணிக்கு முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

ஸ்ரீபெரும்புதுர் -குன்றத்தூர் சாலை தடைபடும் என்பதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரிநீர் திறப்பின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை