தமிழக செய்திகள்

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசர கால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்குகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது