தமிழக செய்திகள்

சென்னை சேத்துப்பட்டில், ஏ.டி.எம். மைய காவலாளி துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்..!

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக துப்பாக்கியில் இருந்த குண்டு காவலாளி வயிற்றில் பாய்ந்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 7வது அவென்யூவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன காவலாளியான ராணா சிங் என்பவர் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அதிலிருந்த குண்டு அவரது வயிற்றில் பாய்ந்தது. இதில் ராணா சிங் பலத்த காயமடைந்தார்.

துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு அந்த இடத்திற்கு வந்த சக ஊழியர்கள் காயமடைந்த ராணாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு