தமிழக செய்திகள்

மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு

மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர், தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்பு, குற்றச்சாட்டு பதிவுக்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...