தமிழக செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த சென்னை கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், அத்திட்டம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அத்தகைய சூழலில் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறுகிறது என்றால், அது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தான். விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரம் காட்டக் கூடாது. மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்