தமிழக செய்திகள்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் - 18 நிபந்தனைகளுடன் அனுமதி

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமர முடியும்.

விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக விரிவாக திட்ட அறிக்கையுடன், கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் அருகில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சேப்பாக்கம் மைதானம் சார்பில் திருவல்லிக்கேணி அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 20 லட்சம் ரூபாயும், அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்த 25 லட்சம் ரூபாயும், பக்கிங்காம் கால்வாயை தூர்வார 25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை