தமிழக செய்திகள்

சதுரங்கம், கேரம் போட்டி

பாம்பன் மகளிர் கல்லூரியில் சதுரங்கம், கேரம் போட்டி நடந்தது.

ராமேசுவரம், 

பாம்பன் தரவை தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை கொலாஸ்டிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. 5 பிரிவாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் வணிகவியல் துறையில் படிக்கும் 3-வது ஆண்டு மாணவி ஷிமா வெற்றி பெற்றார். இதேபோல் 5 பிரிவாக நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த கார்த்திகா மற்றும் ருக் ஷானந்தா ஆகிய மாணவிகள் வெற்றி பெற்றனர். சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் சோபி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் அருட் சகோதரி எமல்டாராணி, கல்லூரி நிர்வாக பொறுப்பாளர் அருட்சகோதரி ரூபி, துணை பேராசிரியர் ஸ்வீட்லீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...