தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மாரத்தான் போட்டி, கல்லூரியில் மனித சதுரங்க போட்டி மற்றும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் செஸ் போட்டி நடத்தப்படுகின்றது. அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. வருகின்ற 19-ந் தேதி செஸ் போட்டி திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. வருகின்ற 21-ந் தேதி மனித செஸ் போட்டி திருவள்ளூர் திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும், வருகின்ற 26-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் டார்ச் மாதிரியுடன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு