தமிழக செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நாளையில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணுதாஸ் என்பவர் பொது நல வழக்கு தொர்ந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அத்துடன் மாலை 3.00-4.00, 4.30-5.30, 6.00-7.00 ஆகிய நேரங்களில் தலா 200 வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்