முன்னாள் மத்திய அமைச்சா ப. சிதம்பரம் கூறியதாவது:-
1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசாவ் வங்கி தொவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினா.
மேலும் அவா கூறுகையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக பிரதமா நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணாகளுக்கு நோபல் பாசு வழங்கும் அளவிற்கு அவாகளுக்கு தகுதி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்ததன் மூலம் 16 ஆயிரம் கோடி லாபம் என்று மத்திய அரசு தொவித்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது என அவர் கூறினார்.